ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி உள்ளிட்டோர் நடித்த சர்கார் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது.

தற்போது பேட்ட திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. மேலும் அந்த படத்துக்கு நாற்காலி எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இதனை மறுத்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது, என்னுடைய அடுத்த படத்தின் தலைப்பு நாற்காலி அல்ல. பொய்களை பரப்பாதீர்கள் என தெரிவித்துள்ளார்.
“ Naarkkaali” is not the title of my next project , pls stop spreading rumors.
— A.R.Murugadoss (@ARMurugadoss) January 16, 2019