அருள்மொழி வர்மன் - ஜெயம் ரவி
அருள்மொழி வர்மன் என்ற இயற்பெயர் கொண்ட உடையார் ஶ்ரீ ராஜராஜ சோழத் தேவர், சிறுவனாக இருந்த போது தந்தை சுந்தர சோழர் மற்றும் தாய் மலையமான் குமாரி பொன்னி நதியில் படகில் பயணம் செய்த போது ஆற்றில் தவறி விழுந்து விடும் போது பொன்னி நதியே அருள் மொழி வர்மனை காப்பாற்றி தந்ததால் 'பொன்னியின் செல்வன்' என அழைக்கப்பட்டதாக பொன்னியின் செல்வன் நாவல் தெரிவிக்கிறது. ஆதித்த கரிகாலன் & குந்தவையின் தம்பியாக அருள் மொழி வர்மன் கதாபாத்திரம் அமைந்துள்ளது. வானதியின் கணவனாகவும் இந்த கதாபாத்திரம் அமைந்துள்ளது.