கவின்
கவின்

கவினுக்கு கொடுத்த தண்டனை சற்று வித்தியாசமானது

அதாவது கவினை மூக்கால் மன்னித்துவிடு என எழுதும்படி பனீஷ்மென்ட் கொடுத்தார். இந்த தண்டனை கவினுக்கு தான் பொறுந்தும் என்று கூறி அந்த தண்டனையை அவருக்கு வழங்கினார் கஸ்தூரி. கவினும் ஏன் எதற்கு என கேட்காமல் அதனை செய்து முடித்தார்.

கவின் ஒரே நேரத்தில் நான்கு பெண்களை காதலிப்பதாக கூறி அவர்களின் உணர்வுகளோடு விளையாடினார். இதற்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதேநேரத்தில் கவினுக்கும் சாக்ஷிக்கும் இடையே பிரேக்கப் ஆன பிறகு, கவின் முதலில் சாக்ஷி பெயரை நாமினேட் செய்தார்.

அதனை கண்டித்த கஸ்தூரி, இருக்கவரைக்கும் ஜாலி, இல்லைனா வெளியே போடி என்பது ஆணின் குணம். ஏமாத்தினவனை கூட விட்டுக்கொடுக்காதது பெண்கள் மனம் என பதிவிட்டிருந்தார்

இதனால் கவின் தனது சுய நலத்துக்காக பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றியதால் அவர் மீது கஸ்தூரியும் கோபத்தில் உள்ளார் என்பது தெளிவானது. இந்நிலையில் கவினை மன்னித்துவிடு என மூக்கால் எழுத வைத்து கஸ்தூரி தண்டனை வழங்கியுள்ளார்.