STM Banner USA
VRV Banner USA

அடிப்பட்டு இருக்கும் சோகத்தில் விஷ்ணு விஷாலுக்கு கிடைத்த 10 வருட வெற்றி சந்தோஷம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தமிழ் சினிமாவில் மாறுபட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர் நடிகர் விஷ்ணு விஷால்.

Vishnu Vishal shares emotional tweet on his 10 years of Cinema Journey

‘வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதைத் தொடர்ந்து, ‘நீர்ப்பறவை’, ‘குள்ளநரிக் கூட்டம்’, ‘முண்டாசுப்பட்டி’, ‘ஜீவா’, ‘இன்று நேற்று நாளை’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’, ‘மாவீரன் கிட்டு’, ‘ராட்சசன்’, ‘சிலுக்குவார்ப்பட்டி’ என 10 ஆண்டுகளில் 13 தரமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், ‘வெண்ணிலா கபடிக்குழு’ டூ ‘சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்’ வரையிலான தனது 10 ஆண்டுகால திரைப்பயணம் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான சில பதிவுகளை பகிர்ந்துள்ளார்.

அவரது ட்வீட்டில், ‘10 ஆண்டுகளுக்கு முன் இன்று தான் ஒரு நடிகனாக உங்களை சந்தித்தேன். சிலர் நான் நிலைக்க மாட்டேன் என்றனர். சிலர் நான் ஹீரோ மெட்டீரியல் இல்லை என்றனர். எனது திரைப்படம் மற்றும் பார்வையாளர்கள் மீதுள்ள நம்பிக்கையில் இதுவரை வெற்றிகரமாக பயணித்து வருகிறேன்.

எந்த ஒரு சினிமா பின்புலமும் இன்றி திரைத்துறைக்கு வந்து நிறைய விஷயங்களை கஷ்டப்பட்டு தெரிந்துக் கொண்டேன். இன்றும் கற்றுக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது தான் எனது திரைப்பயணம் தொடங்கியதாக கருதுகிறேன். வருங்காலத்தில் பல நல்ல தரமான திரைப்படங்களை கொடுப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. 10 ஆண்டுகளில் இதுவரை நான் சொல்லிடாத வார்த்தை- ரசிகர்களுக்கு நன்றி.

6 வருடங்களாக திரைத்துறையில் சேர வாய்ப்புத்தேடி அழைந்து, வாய்ப்பு கிடைத்து 10 ஆண்டுகள் இந்தத்துறையில் இருப்பதை மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஒவ்வொரு முறை வெள்ளித்திரையில் என்னை பார்க்கும் போது எனது தந்தை முகத்தில் வரும் சிரிப்பு என்னை தொடர்ந்து ஊக்குவிக்கிறது’ என விஷ்ணு விஷால் ட்வீட்டியுள்ளார்.

தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் ‘காடன்’ திரைப்படத்தில் நடித்து வரும் விஷ்ணு விஷாலுக்கு ஷூட்டிங்கில் விபத்து ஏற்பட்டு கழுத்து மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. 4 வார ஓய்வுக்கு பிறகு மீண்டும் அவர் ஷூட்டிங்கில் கலந்துக் கொள்வார் என தெரிகிறது.