சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியான ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில், பிரபு, ரம்யா கிருஷ்ணன், சிம்பு, மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா, ரோபோ ஷங்கர், நாசர், மொட்ட ராஜேந்திரன், விடிவி கணேஷ், மகத் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர்.
ஃபேமிலி எண்டர்டெய்னர் படமான ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியின் சிம்புவின் எமோஷனலான நடிப்பை பலரும் பாராட்டினர்.
இந்நிலையில், இந்த காட்சியின் டப்பிங்கில் தன்னிலை மறந்து நடிகர் சிம்பு கண்ணீர் வடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கண்ணீர் வடித்த சிம்பு - வைரலாகும் டப்பிங் வீடியோ VIDEO