இந்தியாவில் திரைப்படங்களில் பெரிய பிரச்னையாக இருப்பது பைரசி. படங்கள் வெளியான அன்றே இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாவது வழக்கமாகி வருகிறது.
இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் திரைப்பட பைரசி, காப்புரிமை மீறல் தொடர்பான சட்டத்திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, திரைப்படங்களை அனுமதியின்றி வீடியோ பதிவு செய்வது, பிரதிகள் எடுப்பது உள்ளிட்டவை சட்டவிரோதமாகும். அனுமதியின்றி திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.