‘பிளாஸ்டிக் பாட்டில்களை இந்த மெஷினின் வாயில் கொடுத்தா போதும்.. மென்று மறுசுழற்சி செய்யும்!’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Feb 28, 2019 01:16 PM

தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

i say no to plastic initiative - PET bottle,Can collection machine

இதனை அடுத்து தமிழகத்தின் பல்வேறு உணவகங்களில் உடனடியாக பிளாஸ்டிக் பயன்பாடுகள் தவிர்க்கப்பட்டதோடு, பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்டுகளில் பிளாஸ்டிக் பைகள் தடை விதிக்கப்பட்டு துணிப்பைகள் கொண்டுவந்து வாங்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதனால் ஓரளவுக்கு அநேக இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்பட்டு வருகிறது.  இதன் ஒரு அங்கமாக #isaynotoplastic எனும் ட்ரெண்டிங் ஹேஷ்டேக் இணையத்தில் பரவலாகி வருகிறது. ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளை தூக்கி எறிவதாலோ, அப்படியே வைத்திருப்பதாலோ அவை சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்துகின்றன.

இதை தவிர்க்கும் பொருட்டு, முதலில் சென்னை விமான நிலையத்தில் பிளாஸ்டிக் தவிர்த்த பைகள், பொருட்கள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் ஒரு படி கூடுதலாக, சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ்ண் அவென்யூ வணிக வளாகத்தில் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்வதற்கான மெஷின் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான விழிப்புணர்வு துவக்க விழாவினை ஷரூன் பிளைவுட்ஸ் பங்கெடுத்து நடத்தியது. இந்த மெஷினில் இருக்கும் துளைவழியே நாம் பயன்படுத்திய காலி பாட்டில்களை கொடுத்தால், அந்த பாட்டிலை நொறுக்கி அந்த மெஷின் பிளாஸ்டிக் மறுசுழற்சியைச் செய்கிறது.

Tags : #ISAYNOTOPLASTIC #PLASTICFREEPLATES