அடுத்த 14 வருஷத்துக்கு கிறிஸ்துமஸ் கிஃப்ட்.. பக்கத்துவீட்டு தாத்தாவின் பேரன்பு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 19, 2018 12:13 PM
This Oldman Who Died Left Christmas Gifts for Neighbours daughter

வேல்ஸ் நாட்டில் இருந்தவர் வாட்சன். 3 வருடங்களுக்கு முன்பு ஓவன் வில்லியம்ஸ் மற்றும் அவரது மனைவி இருவரும், வாட்சனின் அண்டை வீட்டுக் காரர்களாக குடிபெயர்ந்த பின்னர்தான், ஓவனுக்கு கார்டி எனும் பெண் குழந்தை பிறந்தாள்.

 

அப்போது அண்டை வீட்டுக் காரராக இருந்த கென் வாட்சன், கார்டியின் உண்மையான தாத்தா போலவே அன்புடனும் அக்கறையுடனுமே இருக்கத் தொடங்கியுள்ளார்.  அவ்வப்போது கார்டியுடன் சொந்த தாத்தா போலவே விளையாடுவார். ஆனால் இருண்ட வானின் நட்சத்திரம் போல் இருந்த அந்த தாத்தா, அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் காலமானார்.


அதன் பிறகு, இறந்த தாத்தா வாட்சனின் பொருட்கள் அடங்கிய பை ஒன்றை எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கு வந்தாள் கார்டி. தன் அப்பா ஓவனிடம் தான் எடுத்து வந்த பையையும் அதில் இருந்த 14 பொருட்களை கார்டி காண்பித்துள்ளாள். அதில் இருந்த அத்தனையும் கார்டிக்கு வாட்சன் வைத்திருந்த பரிசுகள். அதைக் கண்டு நெகிழந்த ஓவன், உடனடியாக அதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


இதைக் கண்ட 55 ஆயிரம் பேர், கார்டிக்கு தாத்தா வாட்சன் கொடுத்த இந்த பரிசுகளை கிறிஸ்துமஸ் பரிசுகளாக எடுத்துக்கொண்டு, அவற்றை நினைவுப் பரிசுகளாக பாவித்து, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பரிசு என, அடுத்த 14 வருடங்களுக்கு கார்டிக்கு பரிசு கொடுக்கச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். இப்போது 2 வயது இருக்கும் கார்டி தனது 16 வயதில் அனைத்து பரிசுகளையும் பெற்றுவிடக்கூடும், மேலும், அவளுக்கு கிறிஸ்துமஸ் கதை உருவாகிவிடும் என்றும் கூறியுள்ளனர்.

 

எனவே  அதனை ஏற்று, ஓவனும் அவ்வாறே, பக்கத்து வீட்டு தாத்தா வாட்சனின் பரிசுகளை அவரது பேத்தியாகவே வளர்ந்த கார்டிக்கு ஆண்டுக்கு ஒரு பரிசு என தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

Tags : #GRANDPA #VIRAL #CHIRSTMAS #HUMANITY #GIFT