‘இதென்னடா காருக்கு வந்த சோதனை’.. பெட்ரோல் பங்கில் பெண் செய்த வைரல் காரியம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 19, 2018 11:45 AM
Women tries to put petrol for an electric battery car video goes viral

அமெரிக்காவில்,   பெண் ஒருவர் எலக்ட்ரிக் கார் ஒன்றுக்கு பெட்ரோல் போட முயற்சித்து டோஸ் வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெட்ரோல்- டீசல் என வண்டிகளில் நிரப்பிக்கொண்டு சூழலும் புகை மண்டலத்தையும் மாசு மண்டலத்தையும் உருவாக்க விரும்பாத மேற்கத்திய நாடுகளில், மெதுமெதுவாக எலக்ட்ரிக் கார்களில் தொடங்கி, ஆளே இல்லாத தானியங்கி கார்கள் வரை களமிறக்கப்பட்டுள்ளன.


ஆனால் நம்மூர் பெட்ரோல் பங்குகளில் ஆட்கள் நிற்பதுபோல், அங்கு எலக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்வதற்கு ஆட்கள் நிற்க மாட்டார்கள். அப்படித்தான், டெஸ்லா என்கிற புதிய வகை எலக்ட்ரிக் காரை பெட்ரோல் பங்குக்கு எடுத்துச் சென்று, மின்சாரத்திற்கு பதில் பெட்ரோலை பாய்ச்ச முயற்சித்திருக்கிறார் ஒரு பெண்மணி.


முன்னதாக எவ்வளவுக்கு பெட்ரோல் போட வேண்டும் என தன் கார்டினை அங்கிருக்கும் ஸ்வைப்பரில் தேய்த்துவிட்டு அதில் குறிப்பிடுகிறார். பின்னர் பெட்ரோல் பம்பினை எடுத்து, தான் ஓட்டிவந்திருந்த எலக்ட்ரிக் காரில் பெட்ரோல் போடும் இடத்தைத் தேடியுள்ளார். ஆனால் காரின் ஓரிடத்தில் சார்ஜிங் போர்டு என்று இருந்ததை பார்த்தும் கூட அந்த பெண் யோசிக்கவில்லை.

 

அந்த பெண் செய்துகொண்டிருந்த இந்த சேட்டைகளை அடுத்தடுத்து பின்னால் வந்து நின்ற கார் காரர்கள் அமைதியாக நின்று கமுக்கமாக சிரித்தபடி வேடிக்கை பார்த்துள்ளனர். பின்னர் ஒருவர், அந்த பெண்ணிடம் சென்று நிலையை விளக்கிக் கூறத்தொடங்கினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags : #VIRAL #CAR #ELECTRIC CAR #BATTERYCAR #PETROL #WOMEN