தண்ணீர் லாரிக்கு இரையான சிறுமி..கையில் சாக்லேட் கவர்.. கலங்கிய நெஞ்சங்கள்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Dec 08, 2018 02:01 PM
நேற்று காலை கீழ்ப்பாக்கம் பகுதியில் தண்ணீர் லாரி ஒன்று 12 வயது சிறுமி மீது ஏறி விபத்துக்குள்ளான சம்பவம், சென்னைவாசிகளையும், சிறுமியின் உறவினர்களையும் மற்றும் விபத்தினை நேரில் பார்த்தவர்களையும் உலுக்கியுள்ளது.
கனவுச் சிறகை சுமந்துகொண்டிருந்த பள்ளி மாணவியை, அவளது சொந்தக்காரர் தன் இருசக்கர வாகனத்தில் அழைத்து வரும்போது பேருந்துக்கும், தண்ணீர் லாரிக்கும் இடையில் இருந்த சிறிய கேப்பை பயன்படுத்தி ஸ்பீடாக முன்னேற முயற்சித்துள்ளார்.
ஆனால் அவர் வலுவிழுந்து நிலைதவறி சிறுமியுடனும் வண்டியுடனும் கீழே விழுந்தார். அதைப் பார்த்து சுற்றி இருந்த அனைவரும் பதற்றப்பட்டு ஓடி வருவதற்குள் சிறுமியின் ஒருபக்க தலையில் தண்ணீர் லாரியின் பின் சக்கரங்கள் ஏறியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளாள். உடனே வண்டி ஓட்டி வந்த சொந்தக் காரருக்கு தர்ம அடி விழுந்துள்ளது.
அந்த கனவுச் சிறகின் இறக்கை ஒடிந்து போனது. பள்ளி செல்ல வேண்டிய வாகனத்துக்கு அன்றைக்கு புதிய டிரைவர் என்பதால் சிறுமியின் வீட்டுக்கு செல்ல வழி தெரியாமல் டிரைவர் வந்துள்ளார். அதனால் சொந்தக்காரரின் வண்டியில் சிறுமி வந்துள்ளாள். மேலும் லாரி ஏறிய அந்த சிறுமியின் கைகளில் சாக்லேட் இருந்ததைப் பார்த்து விம்மி அழாதவர்கள்தான் அந்த கூட்டத்தில் அதிகம்!