'அவருக்கு ஒரு நியாயம்...எனக்கு ஒரு நியாயமா'?....நீதிமன்றத்தில் குமுறிய பிரபல கிரிக்கெட் வீரர்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 08, 2018 01:53 PM
If Azhar is allowed to return, why not me: Sreesanth ask SC

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு ஒரு நியாயம்,எனக்கு ஒரு நியாயமா? என்று தடைவிதிக்கப்பட்டிருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்,உச்சநீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

ஐபிஎல் தொடரின் போது வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கடந்த 2013-ம் ஆண்டு புகார் எழுந்தது.இதனைத்தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், மற்றும் அஜித் சாண்டிலா, அங்கீத் சவான் ஆகிய வீரர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட வீரர்களுக்கு கிரிக்கெட்டில் வாழ்நாள் தடை விதித்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது.

 

இந்நிலையில் இதுதொடர்பான விசாரணை தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.அப்போது ஸ்ரீசாந்த் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், சல்மான் குர்ஷித், ‘ஸ்ரீசாந்துக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் தடை அதிகப்படியானது. தற்போது அவருக்கு வயது 36.இதன்பின்பு அவரால் உள்ளூர் போட்டிகளில் கூட விளையாட முடியாது.

 

தற்போது இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. ஸ்ரீசாந்தை அதில் விளையாட அனுமதிக்கவில்லை என்றால் அந்த வாய்ப்பும் பறிபோகும். அதனால் இடைக்கால தடையாவது விதித்து அவரை விளையாட அனுமதிக்க வேண்டும் என்றார்.

 

மேலும் ஸ்பாட் பிக்சிங் புகாரில் சிக்கி,வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட,இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாரூதினுக்கு வாழ்நாள் தடை நீக்கப்பட்டதோடு,அவரை ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் போட்டியிடவும்,இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதித்திருக்கிறது.

 

ஆனால் ஸ்ரீசாந்துக்கு மட்டும் அனுமதி மறுப்பது எந்த விதத்தில் நியாயம் என  சல்மான் குர்ஷித் வாதாடினார்.இதையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி மூன்றாவது வாரத்துக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

Tags : #MATCHFIXING #CRICKET #BCCI #SALMAN KHURSHID #IPL SPOT-FIXING SCANDAL #MOHAMMAD AZHARUDDIN #SREESANTH