ரஃபேல் ஒப்பந்த முறைகேடு: மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு.. அருண் ஜெட்லியின் பதில்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Sep 23, 2018 02:01 PM
இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, ‘பிரான்ஸ் அதிபர் தெரிவித்த பிறகும் பாதுகாப்புத்துறை அமைச்சர் விமான விலையை கூற மறுப்பது ஏன் என்றும் ரஃபேல் விமான விவகாரத்தில் அனில் அம்பானியுடன் சேர்ந்து மோடி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதல் செய்ததாகவும் ராணுவ வீரர்களின் தியாக ரத்தத்தை அவர் அவமதித்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, ‘இருவேறு நாடுகளின் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்று பட்ட கருத்தினை கூறுவது என்பது தேசியத்தின் அமைதிப் போக்கிற்கு பங்கம் ஏற்பட்டுவிடுமோ என்கிற சந்தேகத்தைத்தான் எழுப்புகிறது’ என்றும், ’எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது’ என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
Tags : #NARENDRAMODI #RAHULGANDHI #BJP #CONGRESS #ARUNJAITLEY #RAFAELDEALSCAM