கேரள வெள்ளம்...100 பேரை காப்பாற்றிய மீனவர்...சாலை விபத்தில் பலியான பரிதாபம் !

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 01, 2018 12:19 PM
kerala fisherman Jineesh Jerome saved 100 ppl in kerala flood died acc

கேரளாவில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் ஏராளமான மக்கள் சிக்கிய போது ராணுவம் வருவதற்கு முன்பு மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்கள் மீனவர்கள்.அதில் மிகமுக்கியமானவர் மீனவர் ஜினேஷ். இவர் மீட்டுப்பணிகளில் ஈடுபட்டு 100-கும் மேற்பட்ட மக்களை வெள்ளத்திலிருந்து காப்பாற்றினார்.

 

இவர் கடந்த வாரம் கன்னியாகுமரியில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்தார்.இந்நிலையில் நேற்று சிகிக்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.இது கேரள மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

கடும் வெள்ள பாதிப்பின் போது உடனடியாக செயல்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்கள் மீனவர்கள்.அதனால் அவர்களை கேரளத்து ராணுவ வீரர்கள் என கேரள முதலமைச்சர் அழைத்தார்.மேலும் "மீனவர்கள் தான் உண்மையான மீட்பர்கள்" என்று  பாராட்டிய  அம்மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக், அவர்களை கௌரவிக்கும் விதமாக 200 மீனவர்களுக்கு காவல்துறையிலும் கடலோரக் காவல்படையிலும் சேர  பணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

கேரள மக்கள் அம்மாநில மீனவர்களை  ‘கரையோர வீரர்கள்’ என்றே அழைக்கின்றனர்.இந்நிலையில் மீனவர் ஜினேஸின் மரணம் கேரள மக்களுக்கு கடும் சோகத்தை அளித்துள்ளது

Tags : #KERALAFLOOD #KERALA #KERALA FISHERMAN #JINEESH JEROME