தமிழகத்தில் 2 இடங்களில் ஹைட்ரோகார்பன் ஒப்பந்தம் இன்று: அதே நிறுவனமா?
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Oct 01, 2018 12:15 PM
தமிழ்நாட்டை பொறுத்தவரை மீத்தேன், ஸ்டெர்லைட், எட்டுவழிச்சாலை போன்ற திட்டங்கள் வந்தபடி இருக்கின்றன. முன்னதாக வந்த கூடங்குளம் அணு உலைக்கு எதிரான பிரச்சனைகள் உருவாகி, பின்னர் அணு உலைக்கான போராட்டத்தின் கொதிப்பு அடங்கியது. பிறகு வந்த கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டங்களுக்கு பின் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கான பணிகள் தற்காலிகமாக நிகழாமல் இருந்தன.
இந்த நிலையில் தமிழகத்தில் 2 இடங்கள் உட்பட நாடு முழுவதும் சுமார் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் இன்று டெல்லியில் கையெழுத்தாகிறது. இதற்கான ஒப்பந்தத்தையும் ஸ்டெர்லைட் உரிமை நிறுவனமான வேதாந்தா நிறுவனமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : #BJP #NARENDRAMODI #EDAPPADIKPALANISWAMI #TAMILNADU #INDIA #DELHI #HYDROCARBON