'கலருக்கு ஏத்தமாரி ரோல்ஸ்ராய்ஸ்'...கலக்கும் இந்திய தொழில் அதிபர்!
Home > News Shots > தமிழ்By Jeno | Feb 06, 2019 07:53 PM
ரூபன் சிங் என்னும் சீக்கியத் தொழிலதிபர், 7 நாள் ரோல்ஸ்ராய்ஸ் சேலஞ்ச் மூலம் இணையத்தில் பிரபலமாகியுள்ளார்.
![Indian-Origin Billionaire Spends Rs. 50 Crore To Buy Rolls-Royce Cars Indian-Origin Billionaire Spends Rs. 50 Crore To Buy Rolls-Royce Cars](https://i5.behindwoods.com/news-shots/images/tamil-news/indian-origin-billionaire-spends-rs-50-crore-to-buy-rolls-royce-cars.jpg)
லண்டனில் வசிக்கும் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான ரூபன் சிங்,ஒவ்வொரு நாளும் தனது டர்பனின் நிறத்துக்கு ஏற்றவாறு ரோல்ஸ்ராய்ஸ் காரில் பயணம் மேற்கொள்வார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆடம்பரக் கார்கள் மீது அலாதிப்பிரியம் கொண்ட அவர் ஏராளனமான சொகுசு கார்களை வைத்திருக்கிறார்.அதிலும் குறிப்பாக ரோல்ஸ்ராய்ஸின் மீது அவருக்கு ஆர்வம் அதிகம்.இதனால் 7 நாட்களும் 7 நிறங்களைக் கொண்ட ரோல்ஸ்ராய்ஸ் காரைப் பயன்படுத்தி வருகிறார்.லண்டனில் நிதி நிறுவனத்தை நடத்தி வரும் ரூபன் சிங்கிற்கு,கடந்த 2000-ம் ஆண்டு சுமார் 738 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக 'த சன்டே டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
’பிரிட்டிஷ் பில்கேட்ஸ்’ என்று அழைக்கப்படும் ரூபன் சிங்,இவை அனைத்தும் ''கடவுளின் அருளால்தான் சாத்தியமானது'' என்று பவ்வியமாக தெரிவித்துள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)