'இந்தியாவை எங்களை தேடி வர வைப்போம்'...சவால் விட்டிருக்கும் பாகிஸ்தான்!...எதுக்கு இந்த சவால்?

Home > News Shots > தமிழ்

By Jeno | Feb 12, 2019 12:15 PM

நாங்கள் உங்களுடன் கிரிக்கெட் விளையாட விரும்புறோம் என இந்தியாவை கேட்க வைப்போம் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.தற்போது அவரின் கருத்து கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

India will ask to play with us,says PCB MD Wasim Khan

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன்  கிரிக்கெட் விளையாடுவதை,இந்திய கிரிக்கெட் அணி தவிர்த்து வருகிறது.ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.இதனால் அவ்வப்போது இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் வார்த்தை போர்களில் ஈடுபடுவது உண்டு.

இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு,பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி,இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடாததால்,எங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமான பி.சி.பி, ஐ.சி.சி-யை அணுகியது.ஆனால் இந்த வழக்கில் பிசிசிஐக்கு சாதகமான தீர்ப்பினை ஐசிசி வழங்கியது.

இந்தநிலையில் இந்திய அணி,பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடியே தீர வேண்டும் என தொடர்ந்து பாகிஸ்தான் வலியுறுத்தி கொண்டே வருகிறது.இதனிடையே பி.சி.பி-யின் புதிய நிர்வாக இயக்குநரான வாசிம் கான் பொறுப்பேற்றுள்ளார்.அவர் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வாசிம் கான் ' பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட விரும்புகிறோம் என இந்திய அணி கேட்க வேண்டும்.அதற்கான சூழ்நிலைகளை நாம் உருவாக்க வேண்டும்.ஆனால் அது மிகவும் சவாலான விஷயம்.ஆனால் தொடர்ந்து இந்தியாவை விளையாடும்படி கேட்டுக்கொண்டே இருப்போம்.மேலும் பாகிஸ்தான் அணியினை இன்னும் பல நிலைகளுக்கு உயர்த்த வேண்டும்.சர்வதேச அளவில் பாகிஸ்தான் வீரர்களை தயார் செய்ய வேண்டியது மிக முக்கியமானது,என வாசிம் கான் தெரிவித்துள்ளார்.

Tags : #PAKISTAN #CRICKET #BCCI #PCB #WASIM KHAN #PAKISTAN CRICKET BOARD #ICC