‘அப்போ தோனி.. இப்போ கோலி’.. ஐசிசியும், அஷ்வினும் வெளியிட்ட #10YEARCHALLENGE!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Jan 17, 2019 07:39 PM
ஒவ்வொரு சீசனுக்கும் நம்மூரில் ஒவ்வொரு சேலஞ்ச்கள் அவதாரம் எடுப்பது வழக்கம். அப்படி சமீபத்தில் தலையெடுத்துள்ள புதிய சேலஞ்ச்தான் இந்த #10YearChallenge.
சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இப்போது எடுக்கப்படும் புகைப்படத்தையும் இணைத்து #10YearChallenge என்கிற ஹேஷ்டேகின் கீழ் சமூக வலைதளங்களில் பதிவிடும் இந்த விநோதமான புதியவகை சேலஞ்சை பலதரப்பட்ட மக்களும், சினிமா, அரசியல், விளையாட்டுத் துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் தத்தம் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த படம் ஒரு இடத்தின் அமைப்பு, தனி மனிதர்கள், குடும்பம் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உடல் ரீதியாக, இடத்தின் அமைப்பு ரீதியாக, பொருளாதார ரீதியாக, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, சாதனைகள் மற்றும் வாழ்க்கை மாற்றங்கள் ரீதியாக பத்து வருடங்களுக்கு முந்தைய படத்துடன், தற்போதைய புகைப்படத்தை ஒப்பிடுவது இந்த சேலஞ்சின் நோக்கமாக இருக்கிறது.
இவ்வரிசையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் சர்வதேசக் கிரிக்கெட் தரவரிசையில் இடம்பிடித்த வீரர்களின் பட்டியல், இன்றைய வீரர்கள் பட்டியல் ஆகியவற்றை பற்றிய நினைவுகளை ஐ.சி.சி தன் அலுவல் ரீதியான சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.
#2009vs2019@msdhoni still smashing sixes and finishing chases! 🙌 pic.twitter.com/fv0wvz3rnS
— ICC (@ICC) January 15, 2019
இதில் சர்வதேச ஒருநாள் போட்டிகளின் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் 2009-ல் முதலிடம் பிடித்த அப்போதைய இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனியின் நினைவினையும், தற்போது 2019-ல் முதலிடம் பிடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் நினைவுகளையும் தனித்தனியே பதிவிட்டுள்ளது.
ODI century number 39 for @imVkohli earns him the Player of the Match award in Adelaide! 👏 #AUSvIND pic.twitter.com/oDlTLyv4gv
— ICC (@ICC) January 15, 2019
இதேபோல், இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வினும் 10 வருடங்களுக்கு (2009) முன்பாக ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தென்-ஆப்ரிக்காவில் விளையாடிய தனது புகைப்படத்தையும் தற்போதைய புகைப்படத்தையும் இணைத்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.
My #10YearChallenge took me to the 2009 Ipl in South Africa. 🤩 well I nominate @DineshKarthik and @SriniMaama16 now to take it forward.😝 pic.twitter.com/nICuqkkkxr
— Ashwin Ravichandran (@ashwinravi99) January 16, 2019