பாகுபலி சிவகாமியை மிஞ்சும் செம்பியன் மாதேவி சிலை வரலாறு!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Sep 23, 2018 02:36 PM
செம்பியன் மாதேவி சிலை திருட்டுப் போயுள்ளதாகவும் அது அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் டிசியின் ஒரு அருங்காட்சியகத்திக் உள்ளதாகவும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஆதாரப்பூர்வமாக நாகப்படிணம் காவல் துறை ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார். சோழப் பேரரசின் சிவகாமி அல்லது ராஜமாதா என்று செம்பியன் மாதேவியைச் சொல்லலாம். மூத்த சோழப் பேரரசரான கண்டராதித்யரை மணந்து மகன் உத்தமச்சோழர் என்னும் மதுராந்தகச் சோழரை பெற்றெடுத்தார்.
பின்னர் கணவர் கண்டராதித்ய சோழரின் மறைவுக்கு பின் துறவு மேற்கொண்ட செம்பியன் மாதேவி தீவிர சிவபக்தை ஆனார். அதன் பொருட்டு சோழ நிலப்பரப்பில் எண்ணற்ற சிவாலயங்களை பல சிற்பிகளை கண்டெடுத்து நிறுவினார். கிட்டத்தட்ட இவர் நிறுவிய 10 சிவாலயங்கள் இன்றும் வரலாற்றுத் தலமாக விளங்கி நிற்கின்றன. குறிப்பாக கும்பகோணம் கண்டராதித்தியபுரமத்தில் உள்ள சிவாலயம் முக்கியமானது. இதேபோல் உலகிலேயே முதல்முறையாக ஐம்பொன் நடராஜர் சிலையை வடித்து நிறுவியதும் செம்பியன் மாதேவிதான்.
பின்னர் தன் மகன் மதுராந்தகச் சோழரை அரியணை ஏற்றிவிட்டு மறைந்த செம்பியன் மாதேவியின் வீரம், அறம், கொடை, சிவபக்தி, அரசாளும் கொள்கை எல்லாவற்றையும் பார்த்து வியந்த அவரது பேரன் ராஜராஜச் சோழர் செம்பியன் மாதேவியை பார்வதியின் அவதாரம் என்றே நம்பினார். எனினும் செம்பியன் மாதேவியின் நினைவாக ஐம்பொன் சிலையை முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் வடித்தனர். இறுதியாக கோனேரி ராசபுரத்தில் இருந்த அந்த செம்பியன் மாதேவி சிலை 40 ஆண்டுகளுக்கு முன் மாயமானது.
இந்த நிலையில்தான், வாஷிங்டன் டிசி அருங்காட்சியத்தில் அந்த சிலை வைக்கப்பட்டுள்ளதாக யானை ராஜேந்திரன் எனும் வழக்கறிஞர் கொடுத்த புகாரின் பேரில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியான ஐஜி பொன் மாணிக்கவேல் குழுவுக்கு வழக்கு கைமாற்றப்பட்டுள்ளது. இதன் உண்மையைத் தன்மையை விசாரிப்போம் என்றும், உண்மையாய் இருந்தால் சிலையை மீட்போம் என்றும் அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.