பெட்ரோல் பங்கை 'சுக்குநூறாக' நொறுக்கி கோரத்தாண்டவம் ஆடிய கஜா!
Home > News Shots > தமிழ்By Manjula | Nov 16, 2018 11:44 AM
கஜா புயல் செல்லும் இடங்களை எல்லாம் ஆக்ரோஷமாகத் தாக்கி வருகிறது. தற்போதைய நிலவரப்படி கஜா புயல் திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளது. இந்த புயல் காரணமாக தஞ்சை, நாகை,புதுக்கோட்டை,ராம்நாதபுரம் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்ட்டுள்ளன.
குறிப்பாக தஞ்சை,திருவாரூர் மாவட்டங்களில் விவசாய பயிர்கள், தென்னை மற்றும் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளது. 12,000 மின் இணைப்புகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் இந்த புயலுக்கு சுமார் 15 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் நிதியுதவியாக அளிக்கப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் பட்டுக்கோட்டையில்(தஞ்சை) உள்ள மயிலம்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்று இந்த புயலை எதிர்கொள்ள முடியாமல் நொறுங்கிக் கிடைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இதனைப்பார்த்த பொதுமக்கள் பெட்ரோல் பங்கையே இப்படி நொறுக்கிருச்சே என ஆதங்கப்பட்டு வருகின்றனர்.
#கஜா புயலால் சுக்குநூறான #பட்டுக்கோட்டை மயில்பாளயம் #பெட்ரோல் பங்க் ! #GajaCyclone #CycloneGaja pic.twitter.com/4TANodiKPt
— 🌾 விவசாயி பேரன் 🌾 (@stephanmass) November 16, 2018