"தமிழகத்தை சூறையாடிய கஜாவின் அடுத்த டார்கெட் இது தான்"...தமிழ்நாடு வெதர்மேன்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 16, 2018 11:34 AM
Cyclone \'Gaja shifting track to align with Tamil Nadu coast

வங்கக்கடலில் உருவான ‘கஜா' புயல் கரையைக் கடந்துள்ளது. தற்போது புயல் திண்டுக்கல்லில் மையம் கொண்டுள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு மேல், கஜா புயல் நாகை - வேதாரண்யத்திற்கு இடையே கரையைக் கடந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று கன மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் கஜாவின் அடுத்த இலக்கு கேரளா என தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்."இடுக்கி மாவட்டத்தில் கஜா புயலால் கனமழை இருக்கும். விடுமுறை காலத்தில் மூணாறு நகரம் வந்திருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

 

குறைந்த நேரத்தில் அதிகமான மழை பொழிவு இருக்கும் என்பதால், இடுக்கி மாவட்டம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எர்ணாகுளம், கோட்டயம், ஆழப்புழா ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை இருக்கும்.கஜா புயல் நகரும் பகுதிகளில் எல்லாம் தொடர் மழை இருக்கும்,என தெரிவித்துள்ளார்.

Tags : #GAJACYCLONE #KERALA #GAJA CYCLONE UPDATE #TAMIL NADU WEATHERMAN