'அன்பிற்கும் உண்டோ'..ஆற்று வெள்ளத்தில் குட்டிகளுடன் தத்தளித்த நாய்!

Home > News Shots > தமிழ்

By |
Fire officers saved Dogs from Cauvery River

மேட்டூரில் இருந்து சில நாட்களுக்கு முன் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், காவிரி ஆற்றின்  இரு கரைகளிலும் வெள்ளம் கரைபுரண்டோடி வருகிறது.

 

முன்னதாக காவிரி கரையோரம் இருந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் ஐந்தறிவு படைத்த மிருகங்களுக்கு இந்த எச்சரிக்கை எதுவும் இல்லாததால் அவைகள் அங்கேயே தங்கி விட்டன.

 

அதில் நாய் ஒன்று தனது 2 குட்டிகளுடன் ஆற்றின் நடுவே வெள்ளத்தில் மாட்டிக்கொண்டது. இதைத்தொடர்ந்து தனது குட்டிகளை வாயில் கவ்வி அங்கிருந்த மேடான பகுதியில் கொண்டு போட்டது.தாய் நாய்க்கு நீந்தத் தெரிந்தாலும், குட்டிகளை பிரிய மனமில்லாமல் அங்கேயே சுற்றிச்சுற்றி வந்தது.

 

நடுநடுவே சாலையைப் பார்த்து குலைத்து தனது குட்டிகளை காப்பாற்ற போராடியது. 4 நாட்கள் நீடித்த இந்த போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது. அந்த வழியாக நேற்று சென்ற ப்ளூகிராஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் இதனைப்பார்த்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்க, அவர்கள் விரைந்து வந்து தங்கள் உயிரைப் பணயம் வைத்து நாயையும்,குட்டிகளையும் காப்பாற்றினர்.

 

பசியிலும், அரைமயக்கத்திலும்  இருந்த தாய் நாயை வாயில் கயிற்றால் கட்டியும், குட்டி நாய்களை கூடையில் போட்டும் தோளில் சுமந்து தண்ணீரை கடந்து தீயணைப்பு வீரர்கள் மீட்டு வந்தனர்.நடு ஆற்றில் தவித்த நாய் 4 நாட்களுக்கு பிறகு மீண்ட மகிழ்ச்சியில் வாலை ஆட்டியும், குரைத்தும் தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி கூறியது. நாய்க்கும் அதன் குட்டிகளுக்கும் தற்போது உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : #CAUVERY #DOGS