சிறுமி பலாத்கார வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை.. 5 பேர் விடுதலை!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Dec 28, 2018 04:52 PM
15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில்,திமுக முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2012-ஆம் ஆண்டு பெரம்பலூரைச் சேர்ந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் என்பவரது வீட்டில் வேலை பார்த்து வந்த கேரளாவைச் சேர்ந்த 15 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்துகிடந்தார். பிரேத பரிசோதனையில் அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர்கள் அளித்த சந்தேக புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏ ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்களான ஜெய்சங்கர், அன்பரசு, மகேந்திரன், விஜயகுமார், அரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம் ஆகியோர் மீது கடத்தல், பலாத்காரம், கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில், அந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.எல்.ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின்கீழ் விசாரணைக்கு வந்ததை அடுத்து இத்தகைய தண்டனை ராஜ்குமாருக்கு வழங்கப்பட்டது. வழக்கில் சிக்கிய மற்றவர்கள் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர். மேலும், இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட பன்னீர்செல்வம் என்பவர் முன்னதாகவே வழக்கு நடைபெறும்போதே இறந்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.