'39 ஆண்டு கால சாதனையை''கிளீன் போல்டாக்கிய''...இந்தியாவின் யார்க்கர் மன்னன்!
Home > News Shots > தமிழ்By Jeno | Dec 28, 2018 04:03 PM
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.பாக்சிங் டே’ நாளில் தொடங்கிய இந்த போட்டியானது ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து, 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. புஜாராவின் அசத்தலான சதம் இந்திய அணியின் ஸ்கோரை அபாரமாக உயர்த்தியது. விராத் கோலி 82 ரன்களும்,மயங்க் அகர்வால் 76 ரன்களும் எடுத்தனர்.
இந்நிலையில் நேற்று முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 6 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்திருந்தது.இதையடுத்து இன்று ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியால் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை.மேலும் பிட்ச்சின் தன்மை முற்றிலும் மாறியதால்,அந்த அணி வீரர்களால் நிலைத்து நின்று ஆட முடியவில்லை.
இந்திய தரப்பில் பும்ரா, 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். அவரது வேகபந்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்களின் விக்கெட்கள் சீட்டு கட்டு போல் சரிய தொடங்கியது.அதோடு புதிய சாதனை ஒன்றையும் பும்ரா படைத்தார்.சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஆண்டில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் பும்ரா (45 விக்கெட்) முதலிடம் பிடித்தார்.
அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்க மண்ணில் ஒரே ஆண்டில், ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்களை கைப்பற்றிய முதல் ஆசிய வீரர் எந்த சாதனையையும் படைத்தது அசத்தினார் பும்ரா.