கோயம்பேட்டில் விதிகளை மீறிய ஆக்கிரமிப்புகள் அகற்றம்.. அதிகாரிகள் அதிரடி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Aug 29, 2018 03:50 PM
Eviction in Koyambedu Market

சென்னை கோயம்பேடு சந்தை ஆசிய கண்டத்திலேயே பெரிய சந்தைகளுள் முக்கியமானது.  இங்கு பலதரப்பட்ட மக்கள் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள்,  விளைபொருட்கள்  முதலான உணவுபொருட்களை சந்தைப்படுத்தி வருகின்றனர்.  ஆனால் இங்குள்ள மார்க்கெட் வருடாவருடம் ஒப்பந்த விதிமுறைகளின் அடிப்படையில் பங்குதாரர்களைக் கொண்டு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. எனினும் இங்கு சந்தைக் கடைகளை அமைப்பதற்கான இடங்கள் முறையாக ஒதுக்கப்பட்டுள்ளன.

 

மேலும் இங்கு சந்தைப்படுத்தும் வியாபாரிகள் விதிகளை மீறி, ஆக்கிரமிப்புகளை செய்வதாக இவர்களின் மீது, அங்காடி முதன்மை நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் தீவிர நடவடிக்கை எடுக்கும் வகையில், திறந்த வெளியில் அடுக்கப்பட்ட பிளாஸ்டிக் பெட்டிகளை தூக்கி வீசியுள்ளார். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை காலி செய்யும்படியாக  முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டும் வியாபாரிகள் காலி செய்யாததனால்,  இத்தகைய நடவடிக்கை என இதர அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் வியாபாரிகள் அச்சமடைந்ததோடு,  அப்பகுதி முழுவதும் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

Tags : #KOYAMBEDUMARKET #EVICTION