'வீதியில் நடப்பதை பார்த்துவிட்டு சும்மா இருக்க முடியாது'..கொடியை அறிமுகம் செய்து விஷால் பேச்சு!
Home > News Shots > தமிழ்By Manjula | Aug 29, 2018 03:43 PM
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஷால் தனது நற்பணி இயக்கத்தை, மக்கள் நல இயக்கமாக மாற்றுவதாக அறிவித்தார்.
தொடர்ந்து தனது 41-வது பிறந்தநாளான இன்று, மக்கள் நல இயக்கத்துக்கான கொடியையும் அவர் அறிமுகம் செய்தார்.
விழாவில் அவர் பேசுகையில், ''வீதியில் நடப்பதை பார்த்துவிட்டு சும்மா இருக்க முடியாது.சும்மா இருந்தால் பிணத்துக்கு சமம்.அரசியல் என்பது மக்கள் பிரச்னையை தீர்ப்பதுதான்; ஆனால் அது ஒரு தொழிலாக மாறிவிட்டது.
நான் வணங்கும் இரண்டு தெய்வங்கள் அன்னை தெரசா மற்றும் அப்துல்கலாம். அன்னை தெரசாவை பார்க்கும் போது அன்பு நினைவுக்கு வரும், அப்துல்கலாமை பார்க்கும் போது அறிவு ஞாபகம் வரும்,''என்றார்.
விஷால் அறிமுகப்படுத்திய கொடியில் விவேகம், வித்தியாசம், விடாமுயற்சி மற்றும் அணி சேர்வோம், அன்பை விதைப்போம் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.