"இனிமேல் அளவா சிரிங்க"...விமான நிலைய பாதுகாப்பு போலீசாருக்கு உத்தரவு!
Home > News Shots > தமிழ்By Jeno | Oct 10, 2018 12:17 PM

இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவோர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (CISF).இவர்களுக்கு தற்போது புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதில் விமான நிலையங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் சிஐஎஸ்எப் போலீசார் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் அதிகமாக சிரிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசார் அதிக உத்வேகத்துடன் காணப்பட்டால் அது, பாதுகாப்பில் சுணக்கம் என்ற கருத்துக்கும், பயங்கரவாத அச்சுறுத்தலுக்கும் ஆளாக வாய்ப்பிருக்கிறது என்ற என கவலை எழுந்துள்ளதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாதுகாப்பில் இருக்கும் அதிகாரிகள் சிரித்த முகத்தைக்காட்டிலும், விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே முக்கியம் எனவும்,அதன் மூலமே எந்த வித அச்சுறுத்தலையும் சமாளிக்க முடியும் என விளக்கமளிக்கபட்டுள்ளது.
Tags : #CHENNAIAIRPORT #CISF
