'சென்னை போலீஸில் காவலர்கள் மட்டுமல்ல...ரோபோவும் வேலை செய்ய போகுது'...காவல்துறையில் புதிய மைல்கல்!
Home > News Shots > தமிழ்By Jeno | Jan 14, 2019 04:34 PM
இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை காவல்துறையில்,போக்குவரத்து பிரச்சனைகளை சரி செய்வதற்காக ரோபோ ஒன்று களமிறக்கப்படுகிறது.இது காவல்துறையில் புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
சென்னையின் மிகமுக்கியமான பிரச்சனையாக கருதப்படுவது போக்குவரத்து நெரிசல் ஆகும்.பல்வேறு இடங்களில் சிக்னல் வசதி இருந்தும் வாகன ஓட்டிகள்,போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை என்ற குற்றசாட்டு வெகுவாக நிலவி வருகிறது.அதே நேரத்தில் காவலர்கள் பற்றாகுறையின் காரணமாக பெரும்பாலான சிக்னல்களில்,போக்குவரத்து போலீசார் இல்லாத சூழ்நிலையும் காணப்படுகிறது.
இந்த பிரச்சனைகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக,இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் போக்குவரத்து பிரச்சனைகளை சரி செய்வதற்காக ரோபோ ஒன்று களமிறக்கப்படுகிறது.இது மாணவர்கள் மற்றும் வயதானவர்கள் சாலையை கடக்க உதவுவது, வாகனங்களை சீர்படுத்தும் பணியில் இந்த ரோபோ ஈடுபட உள்ளது.இது நிச்சயம் 'பீக் அவர்ஸ்' என்று அழைக்கப்படும் நேரங்களான காலை மற்றும் மலையில் போக்குவரத்து காவலர்களுக்கு உதவும் விதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு காட்சிக் கூடத்தை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் துவக்கி வைத்தார்.இதில் சாலை பாதுகாப்பு விதிகள் குழந்தைகளுக்கு புரியும் விதமாகவும் மற்றும் கவரும் வகையிலும் ரோபோ எடுத்து கூறியது மிகவும் சிறப்பான ஒன்றாக அமைந்திருந்தது.