'டிராவிட் ஓகே சொன்னார்,நாங்க செலக்ட் பண்ணுனோம்'...இளம் வீரர் தேர்வானது குறித்து,சுவாரசிய தகவல்!
Home > News Shots > தமிழ்By Jeno | Jan 14, 2019 03:47 PM
கே.எல் ராகுல் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் அவருக்கான மாற்றுவீரராக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டதிற்கு,ராகுல் ட்ராவிட்டின் ஆலோசனை தான் காரணம் என இந்திய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிக்கும், நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கும் இந்திய அணியில் சுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளார்.இளம் வீரரான கில்,கே.எல் ராகுல் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் அவருக்கான மாற்றுவீரராக சேர்க்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய இந்திய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் 'இந்தியா ஏ மற்றும் 19 வயதுக்குட்டபட்டோர் அணிக்கான பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டுடன் கலந்து ஆலோசித்த பிறகு தான்,சுப்மன் கில்லை தவான்,ரோஹித்துடன் மாற்று ஓப்பனராக களமிறக்க முடிவு செய்யப்பட்டது.சுப்மன் உலக கோப்பையில் ஆடுவாரா என்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது.ஆனால் அவர் துவக்க வீரராகவும், நடு வரிசையிலும் சிறப்பாக ஆடக்கூடியவர்.
மேலும் இளம் வீரர்களுக்கு தங்களின் முழு திறமையை வெளிப்படுத்த,இந்த தொடர் மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.இதனிடையே சப்மன் கில் சர்வதேச போட்டிகளுக்கு தகுதியானவர் என்று ராகுல் ட்ராவிட் பரிந்துரைத்ததாகவும் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்தார்.