'அடுத்த ஆண்டு தண்ணீர் பஞ்சம் ஏற்படுமா'?கலக்கத்தில் சென்னை வாசிகள்...வானிலை மையத்தின் முக்கிய அறிவிப்பு!
Home > News Shots > தமிழ்By Jeno | Dec 05, 2018 03:34 PM
தென்மேற்கு வங்கக் கடலில் நாளை காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ''அந்தமான் கடல் பகுதியில் காணப்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை, தென்மேற்கு வங்கக் கடல் நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாக சென்னையில் நேற்று விட்டு விட்டு லேசாக மழை பெய்தது.மேலும் தென்மேற்கு வங்கக் கடலில் நாளை காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலான மழையினை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வடகிழக்கு பருவமழையானது போதிய அளவில் இந்த ஆண்டு பெய்யவில்லை.சென்னையிலும் வழக்கத்தை விட மிகவும் குறைவான அளவில் தான் மழை பெய்துள்ளது.இதனால் அடுத்த ஆண்டு சென்னைக்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படலாம்,என சென்னை வாசிகள் கடும் அச்சத்தில் உள்ளார்கள்.