சச்சின் மற்றும் தோனியை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்த கோலி.. வெளியான புதிய பட்டியல்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Dec 05, 2018 03:31 PM
2018-ஆம் ஆண்டில் அதிக வருவாய் ஈட்டும் 100 இந்திய பிரபலங்களின் பட்டியலை FORBES பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
ஒட்டுமொத்தமான லிஸ்டில், இந்த வருடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் 253 கோடியே 25 லட்சம் ரூபாய் சம்பாதித்து முதல் இடத்தினையும், 228.09 கோடி ரூபாய் சம்பாதிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இரண்டாம் இடத்தினையும், 185 கோடி ரூபாய் வருவாய் பெற்று, சமீபத்தில் வெளியாகிய ரஜினிகாந்தின் 2.O படத்தின் வில்லனான அக்ஷய் குமார் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.
இந்திய விளையாட்டு வீரர்களுக்கான பட்டியலில் கோலி, கடந்த ஆண்டு வருமானமான ரூ. 100.72 கோடியை விட நடப்பாண்டில் ரூ. 228.09 கோடி வருமானம் ஈட்டி, முதல் இடத்தை பெற்றுள்ளார். அடுத்த இடமான இரண்டாம் இடத்தில் இந்த ஆண்டு 101.77 கோடி ரூபாய் சம்பாதித்து ‘தல’ தோனியும், மூன்றாவது இடத்தில் நடப்பாண்டில் 80 கோடி ரூபாய் சம்பாதித்து, இந்திய கிரிக்கெட்டின் முக்கிய அடையாளமான சச்சின் டெண்டுல்கரும் இருக்கின்றனர்.
இதேபோல் இப்பட்டியலில் 4வது இடத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு மத்தியில் பேட்மிண்டன் வீராங்கணை பி.வி.சிந்து இடம் பெற்றுள்ளார். இவருடைய நடப்பு ஆண்டு வருமானம் 36 கோடியே 50 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.