பேங்க், பஸ், மின்வாரிய ஊழியர்கள் உட்பட 17 கோடி பேர் ஸ்டிரைக்.. முடங்குமா தமிழகம்?
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Jan 07, 2019 07:00 PM
மத்திய இந்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இந்தியாவில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி உள்ளது. இதனால் புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை பங்கு நிறுவன விற்பனையை மத்திய அரசு கைவிடவேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்கள் நாளையும் நாளை மறுநாளும் (ஜனவரி 8,9) நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மத்திய அரசு ஊழியகள் சம்மேளனம் நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தின் முன் அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இந்த போராட்டத்துக்கு ஆதரவாக மத்திய அரசு ஊழியர்கள், போக்குவரத்து தொழிலார்கள், வங்கி ஊழியர்கள், காப்பீட்டு தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல தொழில் அமைப்புகள் துணை நிற்கவுள்ளன. இந்த போராட்டத்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்று சுமார் 15 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உட்பட பல்வேறு துறைகளில் இருந்தும் சுமார் 17 கோடி பேர் கலந்துகொள்ளவிருப்பதாகவும் ஊழியர்கள் சம்மேளன செயலாளர் துரைபாண்டியன் பேட்டி அளித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு மின்வாரிய சங்கம், டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் ஊழியர் சம்மேளனம் ஆகியவற்றில் இருந்தும் ஒன்றரை லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அண்ணா தொழிற்சங்கத்தினரை தவிர அனைத்து போக்குவரத்துத் தொழிலாளர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு நடந்தால் பேருந்து போக்குவரத்து சேவை முடங்கும் அபாயமும் உள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை அடுத்து வரவிருக்கும் இந்நிலையில், இப்படியான போராட்டம் நிகழ்ந்தால் என்னவாகும் நிலை என்பது கேள்விக்குறியாகியுள்ளது.