'இது என்ன,இதுக்க மேலேயும் லந்து கொடுப்போம்'...வெற்றிக்கு பின்....கதிகலங்கிய ட்ரெஸ்ஸிங் ரூம்! வைரலாகும் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 07, 2019 07:00 PM
Team India celebrate their emphatic win in Dressing Room Video

கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி,72 வருட டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில்,டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

 

ஆஸ்திரேலியவில் சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி,4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் 2 - 1 என இந்திய அணி முன்னிலை பெற்றது. இந்நிலையில் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது.கடைசி போட்டியென்பதால் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பு நிலவியது.அதோடு ஆஸ்திரேலிய அணி போட்டியை வென்று,நிச்சயம் தொடரை சமன் செய்ய முயற்சிக்கும் என்பதால்,கடுமையான நெருக்கடியை ஆஸ்திரேலிய அணி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

 

இந்நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் புஜாரா 193, ரிஷப் பண்ட் 159 ரன்கள் எடுத்து அசத்தினர்.புஜாரா மற்றும் ரிஷப் பண்டின் அதிரடியான ஆட்டம்,ஆஸ்திரேலிய பௌலர்களை நிலைகுலைய செய்தது. ஜடேஜா 81, அகர்வால் 77 ரன்கள் எடுத்து,7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் என்ற இமாலய இலக்கை தொட வைத்தனர்.

 

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடவில்லை.இதனால் ஆஸ்திரேலிய அணி, 300 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து, பாலோ ஆன் ஆனது.இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு பிரச்னை மழை வடிவில் வந்தது.அதோடு வெளிச்சமும் குறைவாக இருந்ததால்,ஆட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

 

அதோடு கடைசி நாள் ஆட்டத்திலும் மழை தொடர்ந்ததால்,ஆட்டம் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இந்தியா இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.72 வருட டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில்,டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளதால்,இந்திய ஆணி வீரர்கள் படு உற்சாகமாக வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.ட்ரெஸ்ஸிங் ரூமில்,இந்திய வீரர்கள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #VIRATKOHLI #BCCI #KLRAHUL #CRICKET #TEAM INDIA #INDIA VS AUSTRALIA