நெருக்கடியான சாலை...'எரிந்த நிலையில் ஓடிய கார்':வைரலாகும் வீடியோ!
Home > News Shots > தமிழ்By Jeno | Nov 09, 2018 09:59 PM
பரபரப்பான போக்குவரத்துக்கிடையே ஒரு கார் எரிந்த நிலையில் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் குர்கானை சேர்ந்தவர் ராகேஷ் சந்தல்.இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு பரிசு பொருட்களை வாங்கிவிட்டு தனது ஹோண்டாசிட்டி காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.வாகனம் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது காரின் என்ஜின் பகுதியிலிருந்து புகை வெளிவர ஆரம்பித்திருக்கிறது.இதை கவனித்த ராகேஷ்,காரை நிறுத்துவதற்கு முயற்சித்திருக்கிறார்.ஆனால் காரனது திடீரென்று தீப்பிடித்து கொண்டது.
உடனடியாக சுதாரித்த ராகேஷ் காரில் இருந்து வெளியே குதித்தார். இருப்பினும் எஞ்சின் இயங்கியதால் தொடர்ந்து காரனது சாலையில் சென்று கொண்டிருந்தது.தொடர்ந்து முன்னேறிய கார் எதிரில் நின்று கொண்டிருந்த ஆட்டோவின் மீது மோதியது.ஆனால் ஆட்டோவில் யாரும் இல்லாததால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.
இதனையடுத்து,சாலையில் போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்த காவல்துறையினரும்,பொதுமக்களும் இணைந்து கடும் முயற்சிக்கு பின்பு காரை நிறுத்தினார்கள்.உடனடியாக தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயானது அணைக்கப்பட்டது.இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்கள்.தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.