"தல தோனி இடத்திற்கு இவர்தான் சரி"...முன்னாள் விக்கெட் கீப்பர் கணிப்பு!
Home > News Shots > தமிழ்By Jeno | Nov 09, 2018 08:50 PM
இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் ஓய்விற்கு பிறகு, அவரின் இடத்தை நிரப்புவது யார் என முன்னாள் விக்கெட் கீப்பர் விஜய் தஹியா கருத்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று விதமான கிரிக்கெட் உலகக்கோப்பை,மினி உலகக்கோப்பை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றவர்,இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனி.சிறந்த கேப்டனாக மட்டுமில்லாமல்,பேட்ஸ்மேன்களை நடுங்க செய்யுமளவிற்கு அதிவேக விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டார்.
இந்நிலையில் தோனியின் மோசமான பேட்டிங் பார்ம் காரணமாக அவர் கண்டிப்பாக ஓய்வு பெற்று,இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக வலுத்து வருகிறது.இதனிடையே மேற்கிந்திய தீவிற்கு எதிரான டி-20 தொடரிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி-20 தொடரிலும் தோனிக்கு வாய்ப்பு வழங்கபடவில்லை.இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த பிசிசிஐ "தற்போதைய முடிவு என்பது தோனிக்கு பிறகு யார் என்ற தேடுதல் தான் கரணம் என தெரிவித்திருந்தது.இது அவர் ஓய்வு பெறப் போவதிற்க்கான முன்னோட்டம் என்றே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தோனியின் ஓய்வுக்கு பிறகு,அவரின் இடத்தை நிரப்புவது யார் என்பது குறித்து,முன்னாள் விக்கெட் கீப்பர் விஜய் தஹியா கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில்,‘இந்திய அணி, தற்போது விக்கெட் கீப்பரை தேடிக்கொண்டிருந்தது.இதற்காகவே சீனியர் மற்றும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் வீரர் விக்கெட் கீப்பராக மட்டுமில்லாமல், ஆல் ரவுண்டராகவும் இருக்க வேண்டும்.
அதுதான் அணிக்கு பலமாக இருக்கும்.தற்போதைய வீரர்களான பார்த்தீவ் படேல், தினேஷ் கார்த்திக் அனுபவ சாலிகள் என்றாலும், ரிஷப் பண்ட் கிடைக்கும் வாய்ப்பை, சரியாக பயன்படுத்துகிறார்.அவர் நிச்சயமாக தன்னை நிரூபித்து,சிறந்த வீரராக ஜொலிப்பர். தோனிக்கு பின் அவர் தான் அந்த இடத்துக்கு சரியாக இருப்பார். ’ என விஜய் தஹியா தெரிவித்திருக்கிறார்.