‘என்ன கேட்காம எதுக்கு பெத்த’.. பெற்றோர் மீது வழக்கு தொடரும் விநோத இளைஞர்!
Home > News Shots > தமிழ்By Selvakumar | Feb 07, 2019 04:40 PM
தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னை பெற்றெடுத்ததற்காக இளைஞர் ஒருவர் தனது பெற்றோர் மீது வழக்கு தொடர இருப்பதாக விநோத முடிவை எடுத்துள்ளார்.
ரஃபேல் சாமுவேல் என்கிற மும்பையைச் சேர்ந்த இளைஞர் பேஸ்புக்கில் தனக்கென ஒரு பக்கத்தைத் தொடங்கி பிள்ளைகள் இல்லாத வாழ்க்கை முறை குறித்து பாடம் எடுத்து வருகிறார். அதில் பெற்றோர்கள் தங்கள் சந்தோஷத்திற்காகவே பிள்ளைகளைப் பெற்றுக் கொள்கின்றனர் என்று கூறியிருக்கிறார்.
மேலும் தங்களுடைய அனுமதி இல்லாமல் பெற்றெடுக்கும் பெற்றோர்களிடம், அவர்களின் பிள்ளைகள் கேள்வி கேட்க வேண்டும் என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனை அடுத்து பிள்ளைகள் எந்த விதத்திலும் பெற்றோர்களுக்கு கடன்படவில்லை என ரஃபேல் தெரிவித்துள்ளார். இதற்கு அடுத்ததாக அவர் அதிர வைக்கும் முடிவு ஒன்றையும் எடுத்துள்ளார். அதன்படி தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னை பெற்றெடுத்த பெற்றோர் மீது வழக்கு தொடர இருப்பதாக கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்
இதில் சிக்கலான விஷயம் என்னவென்றால் பிள்ளைகளின் அனுமதி இல்லாமல் பெற்றோர்கள் பெற்றெடுக்க உரிமை இல்லை என கூறி வரும் அவரிடம், கருவில் இருக்கும் குழந்தையிடம், எப்படி ‘உன்னை பெற்றுகொள்ளலாமா’ என பெற்றோர்கள் அனுமதி கேட்க முடியும் என்கிற கேள்விக்கு அவரிடம் பதிலில்லை.