"சுனாமி சுனாமி"...பதற்றத்தில் கதறும் மக்கள்...நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சிகள்!
Home > News Shots > தமிழ்By Jeno | Oct 01, 2018 09:45 PM
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் சுனாமி அலைகள் தாக்கும் போது கடற்கரை அருகே இருந்த வீட்டின் மேலிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.அதில் அந்த நபர் சுனாமி சுனாமி என மக்களை எச்சரித்துக் கொண்டிருக்கிறார்.அப்போது ஏராளமான மக்கள் கடற்கரையின் அருகில் நின்று கொண்டிருக்கிறார்கள்.அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு எச்சரிக்கிறார்.
இந்நிலையில் கடல் அலையானது கடும் வேகத்தில் கரையை நோக்கி வருகிறது.அப்போது அந்த நபர் கதறி அழுகிறார்.இவ்வாறு அந்த வீடியோ காட்சிகள் பதிவாகி இருந்தன.இந்நிலையில் இடிபாடுகள் மற்றும் சுனாமி யில் சிக்கி காயமடைந்த 1000-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனை களுக்கு வெளியே உள்ள திறந்த வெளியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிலநடுக்கம் காரணமாக வீடுகளை இழந்தவர்கள் திறந்த வெளி முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். ராணுவமும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
WATCH: An #Indonesian man documented the moment a huge #tsunami wave hit and destroyed several homes. The man was able to take a video from atop the roof of the mall, and is heard screaming at the people below to run or take cover.
— Al Arabiya English (@AlArabiya_Eng) October 1, 2018
Read More: https://t.co/lQuRadDYGq pic.twitter.com/zYNEaW9ivk