'மொத்தமாகக் கிளம்பி' சென்னை வந்த ஆப்கான் வீரர்கள்.. என்ன காரணம்?
Home > News Shots > தமிழ்By Manjula | Nov 21, 2018 02:03 PM
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தற்போது சென்னைக்கு வந்து கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் உள்ள ஒரு தனியார் கிரிக்கெட் பயிற்சி மையத்தில் இந்த வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் முத்திரை பதித்து வரும் ஆப்கான் ரஷீத் கான், முஜிபீர் ரஹ்மான் உள்ளிட்ட வீரர்கள் தற்போது துபாயில் டி10 கிரிக்கெட் என்ற 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியை ஆடி வருகின்றனர்.
இந்த தொடர் முடிந்ததும் அவர்களும் சென்னைக்கு வந்து இந்த கிரிக்கெட் பயிற்சியில் இணைந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. மேலும் ஆப்கான் வீரர்கள் இங்கு வந்து பயிற்சி செய்வதற்கு வசதியாக, இந்த கிரிக்கெட் பயிற்சி மையத்துடன் ஆப்கான் கிரிக்கெட் போர்டு ஒப்பந்தம் செய்துள்ளது.
தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் உள்நாட்டு கலவரங்கள் ஆகியவை காரணமாக, ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் சென்னைக்கு வந்து பயிற்சிகளை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.