மகதீரா, பாகுபலி ஆகிய பிரம்மாண்ட வரலாற்றுத் திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ரிலீசான திரைப்படம் "RRR". இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் NTR இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகிய தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவானது. ஆந்திராவை சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர். இந்த படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜூவாக நடித்தார்.
இதேபோல், ஜூனியர் என்.டி.ஆர் இந்த படத்தில் கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். கொமரம் பீம் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் கொமரம் பீம் ஆவார். வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்த இந்த இரு பெரும் வீரர்களும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையே 'ஆர்.ஆர்.ஆர் ' இந்த படத்தின் மையக்கரு என்று இயக்குநர் திரு ராஜமௌலி கூறியிருந்தார்.
இந்த படத்தில் வரும் ராம்சரண் ராமரை போல் சில காட்சிகளில் தோன்றுவார். அதேபோன்றதொரு பிள்ளையார் சிலையும் இந்த விநாயகர் சதுர்த்தியில் வைரலாகி வருகிறது.