
ஒரே வருடத்தில் குடும்பத்தில் மூவரை இழந்த மகேஷ் பாபு
மறைந்த நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும் மகேஷ் பாபுவின் தாயுமான இந்திரா தேவி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறந்தார். முன்னதாக கடந்த ஜனவரி மாதம் நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரர் மரணம் அடைந்தார். இதனையடுத்து, அவருடைய தந்தை கிருஷ்ணாவும் தற்போது மரணம் அடைந்திருப்பது ஒட்டுமொத்த இந்திய திரை உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் கிருஷ்ணாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.