
நண்பன் படத்தில் வரும் விருமாண்டி சந்தனமும் (சத்யராஜ்), டான் படத்தில் வரும் பூமிநாதனையும் (எஸ்.ஜே.சூர்யா) தவறவிட்டுவிடமுடியாது. இருவருமே மாணவர்கள் கட்டுக்கோப்பாகவும், ஒழுக்கமாகவும், அதேசமயம் தேவையான அகாடமிக் அறிவை பெற வேண்டும் என்பதில் சமரசமில்லாமல் யோசிக்கின்றனர். ஆனால் அவர்கள் அதற்கு தேர்ந்தெடுக்கும் அணுகுமுறைதான் சிக்கல் என்பதே அந்த காதாபாத்திரங்களே இறுதியில் உணர்வதாய் இந்த படங்கள் அமையும். டான் படத்தில் இறுதியில், ‘எக்ஸாம் எழுதவிடமாட்டேன்னு சொல்றதுதான்.. செஞ்சிடுவாங்களா.. இன்னும் மன்னிக்குற ஆசிரியர்கள் இருக்காங்க.. அப்படி ஒருத்தராலதான் நான் பிரின்சிபாலா இருக்கேன்’ என சொல்லும் வசனம் இன்றைய 2K கிட்ஸ்களின் இதயம் வென்றது.