எஸ்.ஜே.சூர்யா
வாலி, குஷி என முன்னணி நடிகர்களான அஜீத், விஜய்யை வைத்து திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, நடிகராகும் கனவுடன் திரையுலகில் நுழைந்தவர். அண்மைக்காலமாக நடிகராக ஸ்பைடர், நெஞ்சம் மறப்பதில்லை, மான்ஸ்டர், மெர்சல் என பல திரைப்படங்களில் வெரைட்டி நடிப்பை காட்டி நடித்து பாராட்டுகளை பெற்றார். அண்மையில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான மாநாடு திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா தம்முடைய மிரட்டலான நடிப்பை வழங்கியிருந்தார்.