Behindwoods Gold Mic Music Awards-ல் விருது வழங்கும் நிகழ்வு மட்டுமின்றி விழாவில் அரங்கேறிய சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை இந்த புகைப்பட தொகுப்பில் காணலாம்.
ஏ.ஆர்.ரகுமான் - கமல்ஹாசன்
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி Behindwoods Gold Mic Music Awards - தி குளோபல் ஐகான் ஆஃப் இன்ஸ்பிரேஷன் விருதினை உலகநாயகன் கமல்ஹாசன் வழங்கினார்.
‘தெனாலி’ படத்திற்கு பிறகு 19 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரகுமான் இணைந்திருக்கும் ‘தலைவன் இருக்கின்றான்’ திரைப்படம் குறித்து பேசினார். இப்படத்திற்காக ரகுமான் இசையில் 2 பாடல்கள் உலையில் கொதித்துக் கொண்டிருப்பதாக கமல் கூறினார். இது ரகுமானின் இசை பயணத்தில் முக்கிய இடம்பெறும். அதில் எனக்கும் பங்கு உண்டு என்பதில் மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டார்.