MR.LOCAL (TAMIL) MOVIE REVIEW
சமூகத்தில் இரண்டு வெவ்வேறு படிநிலைகளில் இருக்கும் இருவர் சந்தித்துக்கொண்டால்.... அவர்கள் இருவருக்குள் நடக்கும் மோதல், காதல் அத்தியாயங்களே மிஸ்டர் லோக்கல்.
வழக்கமாக ராஜேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களில் காமெடிக்கு பஞ்சமிருக்காது. அவர்கள் இருவரும் ஒரே படத்தில் இணைந்திருப்பது படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.
மேலும் படத்தில் யோகிபாபு, ரோபோ ஷங்கர் , சதீஷ் என ஒவ்வொரு காட்சிக்கும் ஏதாவது ஒரு காமெடியன்கள் சிவாகார்த்திகேயனுடன் தோன்றி காமெடி செய்ய முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயனுக்கு சரிசமமான ரோல் நயன்தாராவுக்கு. சீரியல் புரொடக்ஷன் கம்பெனியின் சிஇஓவாக வரும் நயன்தாரா, கெத்தாக சொடக்குப் போட்டு மிரட்டுவது முதல் தனக்கு பெற்றோர்கள் இல்லை என எமோஷனல் காட்சிகள் வரை படத்தை தன் தோளில் சுமந்திருக்கிறார்.அவரின் கேரக்டர் இன்னும் சுவாரஸியமாக டிஸைன் செய்திருக்கலாம் இயக்குநர்.
இவர்களைத் தாண்டி கவனம் ஈர்ப்பது ராதிகா. தன் மகனே உலகம் என்கிற வெகுளியான அம்மாவை தன் அனுபவ நடிப்பால் நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார்.
ஹிப்ஹாப் தமிழாவின் எனர்ஜிட்டிக்கான இசை இந்த படத்தில் மிஸ்ஸிங். தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் படத்துக்கு பக்கபலமாக அமைந்துள்ளது.
படத்தில் சினிமா , அரசியல் என ஏகப்பட்ட ரெபரன்ஸ்கள் காட்சிகள். அவை படத்திற்கு சுவாரசியத்தை தருகின்றன. ஆனால் அவை ஒரு கட்டத்துக்கு மேல் கொஞ்சம் ஓவர் டோஸாகவும் மாறுகிறது.
சிவா, நயன்தாரா இருவருக்குள்ளும் இருக்கும் ஈகோ கிளாஸ் தான் கதை என்றாலும் பார்த்து பழகிய திரைக்கதையால் சுவாரஸியம் குறைகிறது. நயன்தாராவுக்கு சொல்லப்பட்ட கதாப்பத்திர வடிவம், சிவகார்த்திகேயனுக்கு சரியாக சொல்லப்படவில்லை. அதனால் இருவருக்கிடையில் இருக்கும் காட்சிகளில் சுவாரஸியம் குறைகிறது.
டிபிக்கலான சிவகார்த்திகேயன் காமெடி, நயன்தாராவின் பர்ஃபாமென்ஸ் ஆகியவை படத்தை தாங்கிப்பிடித்திருக்கின்றன.
BEHINDWOODS REVIEW BOARD RATING
PUBLIC REVIEW BOARD RATING
REVIEW RATING EXPLANATION