கலை சினிமாஸ் சார்பில் வேணு ரவிச்சந்திரன் தயாரித்து விஜய் ஸ்ரீ இயக்கியிருக்கும் படம் தா தா 87,இந்த படத்தில் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். வயதான டானை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
![Wine Kannala video song released from Dha Dha 87 movie Wine Kannala video song released from Dha Dha 87 movie](https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/images/wine-kannala-video-song-released-from-dha-dha-87-movie-photos-pictures-stills.jpg)
மேலும் ஜனகராஜ், கலக்கபோவது யாரு ஆனந்த் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு லேண்டர் லீ மார்ட்டி இசையமைத்துள்ளார். ராஜ பாண்டி ஓளிப்பதிவு செய்துள்ளார்.
தற்போது இந்த படத்திலிருந்து காதலர் தினத்தை முன்னிட்டு வொய்ன் கண்ணால என்ற பாடல் வெளியாகியுள்ளது. இயக்குநர் விஜய் ஸ்ரீ எழுதியுள்ள இந்த பாடலை திவாகர் மற்றும் கானா வினோத் இணைந்து பாடியுள்ளனர். பேருந்தில் பாடும் கானா பாடலாக இந்த பாடல் உருவாகியுள்ளது.