நடிகர் விஷால் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இதனை மறுத்து நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் விஷால் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் விஷாலின் செய்தித் தொடர்பாளர் ஜான்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நடிகர் விஷாலின் திருமணம் பற்றி இந்த படத்திலிருக்கும் பெண்மணியின் புகைப்படத்துடன் விஷாலின் மணமகள் என்று வெளி வந்து பரவி கொண்டிருக்கும் செய்தி முற்றிலும் தவறானதும் உண்மைக்கு புறம்பானதுமாகும்.
மேலும் திருமணம் பற்றி அதிகார பூர்வமான அறிவிப்பு அளிக்கப்பட்ட பின் செய்திகளை வெளியிடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.