செல்லமே திரைப்படம் மூலம் தமிழ்த்திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் விஷால். சண்டக் கோழி திமிரு போன்ற வெற்றிப் படங்களில் தொடர்ந்து நடித்ததன் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
பின்னர் பாண்டியநாடு, ஆம்பள, துப்பறிவாளன் போன்ற படங்களை தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துவருகிறார்.
தற்போது தமிழ் திரையுலகில் நடிகர் சங்கத்தின் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் விஷாலின் திருமணம் குறித்து கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் இதுகுறித்து பேசிய ட்விட்டரில் பதிவிட்ட விஷால்,
என் திருமணம் குறித்த தவறான செய்திகள் வெளியாவது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இது அழகல்ல. இது என்னுடைய தனிப்பட்ட வாழக்கை. என்னுடைய திருமணம் குறித்து விரைவில் அறிவிப்பேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
Wondering how certain articles can carry wrong news and wrong details about my marriage.pls rectify. Not fair. This is my personal life and will be more than happy to announce all details about my marriage officially and happily Soooooon. God bless
— Vishal (@VishalKOfficial) January 10, 2019