எந்த கேரக்டர் எடுத்தாலும் தன் பெயரை நிலைத்து நிற்கச் செய்பவர் திரிஷா. அபியும் நானும் படத்தில் அபியாக, விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் ஜெஸியாக தன் கேரக்டரை ரசிகர்களின் ஆழ்மனதில் பதியச் செய்துள்ளார்.
அதனால் தான் அந்த பெயரைச் சொன்னாலே அந்த கதாப்பாத்திரங்கள் நம் கண்முன் வந்து நிற்கும்.
அப்படி ஒரு கேரக்டர் தான் 96 படத்தில் ஜானு. அவர் அணிந்த அந்த மஞ்சள், நீலம் கலந்த உடை ரசிகர்களை சொக்க வைத்தது. ரசிகர்களும் தேடித் தேடி அந்த உடைகளை வாங்கினார்கள்.
சமீபத்தில் Behindwoods Gold Medal விருதுவழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் த்ரிஷாவுக்கு Golden Princess Of South Indian Cinema என்ற விருது வழங்கப்பட்டது. இதனை நடிகை சிம்ரன் அவருக்கு வழங்கினார்.
விழாவில் அவருக்கு பல்வேறு சமூக வலைதளங்களில் உலவும் பல்வேறு மீம்கள் போட்டுக் காட்டப்பட்டன. முக்கியமாக மெர்சல் விஜய் ஸ்டைலில் அபிய மறக்க ரெண்டு வருஷம்... ஜெஸிய மறக்க 8 வருஷம்... ஜானுவ மறக்க ஒரு யுகமே தேவைப்படும் என்ற Meme பார்த்து த்ரிஷா வெடித்து சிரித்தார்.
பின்னர் அப்ப ஜெஸ்ஸிய மறந்துட்டிங்களா ? னு நக்கலாக கேட்டார்.
ஜெஸ்ஸிய மறந்துட்டிங்களா ? மெர்சல் விஜய் மீம்க்கு த்ரிஷா கொடுத்த ரியாக்ஷன் VIDEO