ஆஸ்கர் விருது வென்ற தயாரிப்பாளருடன் நடிகர் சூர்யா தனது அடுத்த திரைப்படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளார்.

செல்வராகவனின் ‘என்.ஜி.கே’, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். இதில் வரும் கோடை விடுமுறைக்கு ‘என்.ஜி.கே’ திரைப்படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சூர்யா நடிப்பில் உருவாகவிருக்கும் ‘சூர்யா 38’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கவிருக்கும் இப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இது குறித்த அறிவிப்பினை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இப்படத்தில் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற தயாரிப்பாளர் குனீத் மோங்கா இணையவுள்ளார். இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகவுள்ளது.
91வது ஆஸ்கர் விருது விழாவில் இந்தியா சார்பாக சிறந்த ஆவண குறும்பட பிரிவில் விருது வென்ற ‘பீரியட்.எண்ட் ஆஃப் செண்டென்ஸ்’ படத்தின் தயாரிப்பாளருடன் ‘சூர்யா 38’ திரைப்படத்திற்காக நடிகர் சூர்யா கூட்டணி அமைத்துள்ளார்.
Thank you so much ❤️ Such an honour to collaborate with @Suriya_offl @rajsekarpandian this is the start of many between @2D_ENTPVTLTD and @sikhyaent here we go.. @aachinjain 💕 https://t.co/Y1GrMuqJQ9
— Guneet Monga (@guneetm) March 3, 2019