STM Banner USA
VRV Banner USA
www.garudavega.com

சவுந்தர்யா ரஜினிகாந்த் பிரசித்தி பெற்ற குமரி கோயில்களில் சாமி தரிசனம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் நேற்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

Soundarya Rajinikanth visits kanyakumari Bagavathy Amman temple & Suseentharam temple

சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் செய்துக் கொள்ளவிருப்பதாக கூறப்படும் நிலையில், கன்னியாகுமரியில் உள்ள சுசீந்திரன் தாணுமாலய சுவாமி கோயிலிலும், கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமத்தில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயிலிலும், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலிலும் சாமி தரிசனம் செய்தார்.

மேலும், புதிதாக அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோயிலிலும் சவுந்தர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்துள்ளார். சவுந்தர்யா ரஜினிகாந்திற்கும், நடிகரும்-தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடி என்பவருக்கும் வரும் பிப்.11ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.