தமிழக அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரில் தனது ஆதரவு யாருக்கு என்பது குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
Behindwoods Gold Medals விருது விழாவில் சிறந்த தயாரிப்பாளர் பிரிவில் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்திற்காக இயக்குநர் பா.ரஞ்சித் விருது பெற்றார்.
அப்போது பேசிய அவர், சாதிய பாகுபாடு குறித்து அழுத்தமாக பேசிய ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்திற்காக இந்த விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி என்றார். அதைத் தொடர்ந்து அவரிடம் அரசியலில் களமிறங்கியுள்ள ‘வேங்கை மகன்’ ரஜினிகாந்த் மற்றும் ‘தேவர் மகன்’ கமல்ஹாசன் ஆகியோரில் உங்களது ஆதாரவு யாருக்கு என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த பா.ரஞ்சித், இருவருமே இதுவரை தங்களது கொள்கைகள் குறித்த அறிவிப்புகளை வெளியிடவில்லை. அதை பொறுத்தே ஆதரவு யாருக்கு என முடிவு செய்ய முடியும் என்றார்.
மேலும், சிம்பு மற்றும் சீமான் ஆகியோரில் ஆளப்போறான் தமிழன் யார் என கேட்டதற்கு, சிம்புவை விட தமிழ் சூழலில் மிக தீவிரமாக களத்தில் இறங்கி போராடக் கூடியவர் சீமான், ஆகையால் அவருக்கே கொடுத்துவிடலாம் என்றார்.
அரசியலில் ஆதரவு வேங்கை மகனுக்கா? தேவர் மகனுக்கா? - இயக்குநர் பா.ரஞ்சித் ஓபன் டாக் VIDEO